காதலியை கொன்று விடுவேன்; பாலிவுட் நடிகரை மிரட்டிய பெண் ரசிகை

 

காதலியை கொன்று விடுவேன்; பாலிவுட் நடிகரை மிரட்டிய பெண் ரசிகை

கடந்த சில நாட்களாகவே வருண் இல்லத்தை சுற்றி சுற்றி வந்த ஒரு பெண்மணி, வருணை பார்க்க வேண்டும் என காத்திருந்திருக்கிறார். ஷூட்டிங் முடிந்து வந்த வருண், மிகவும் சோர்வாக இருப்பதால் யாரையும் சந்திக்க முடியாது என தெரிவித்துள்ளார்

திரைத்துறை பிரபலங்கள் தங்கள் ரசிகர்களால் பாதிக்கப்படும் நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருப்போம். அதனால் அவர்கள் செக்யூரிட்டி உடனே அலைய வேண்டியதாக இருக்கிறது. ‘பட்லாபூர்’ படத்தின் மூலம் அறியப்படும் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானை ஒரு ரசிகை மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருண் – நடாஷா

varun

வருண் தவான் தனது ரசிகர்களுக்கு மிகவும் மதிப்பளிக்கக் கூடியவர். எந்த நேரம் ரசிகர்கள் சந்திக்க வந்தாலும், அவர்களுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கவே, ஆட்டோகிராப் போடவோ தயக்கம் காட்டமாட்டார்.

கடந்த சில நாட்களாகவே வருண் இல்லத்தை சுற்றி சுற்றி வந்த ஒரு பெண்மணி, வருணை பார்க்க வேண்டும் என காத்திருந்திருக்கிறார். ஷூட்டிங் முடிந்து வந்த வருண், மிகவும் சோர்வாக இருப்பதால் யாரையும் சந்திக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

natasha

இதனால் ஆத்திரமடைந்த பெண்மணி, ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு தன்னைத் தானே தாக்கிக்கொள்ள, செக்யூரிட்டிகள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அவரை சந்திக்காமல் போகமாட்டேன் என அடம்பிடித்த அந்த பெண், வருணின் காதலி நடாஷாவை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.