காதலியை கரம்பிடிக்கும் விஷால் : படுஜோராக நடைபெற்ற நிச்சயதார்த்த விழா; பிரபலங்கள் பங்கேற்பு!

 

காதலியை கரம்பிடிக்கும் விஷால் : படுஜோராக நடைபெற்ற நிச்சயதார்த்த விழா; பிரபலங்கள் பங்கேற்பு!

நடிகர் விஷாலின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் இன்று வெகுவிமர்சியாக நடைபெற்றது.

சென்னை: நடிகர் விஷாலின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் இன்று வெகுவிமர்சியாக நடைபெற்றது.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், நடிகர் சங்க பொது செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அரசியல் களத்திலும் அவ்வப்போது கருத்து கூறி வரும் விஷாலின் திருமணம் பற்றி பல வதந்திகள் பரவி வந்தன.

vishal

அதற்கு எல்லாம் முடிவுக்கட்டும் விதமாக விஷால்,ஐதராபாத்தில் உள்ள தொழில் அதிபரின் மகளான அனிஷாவைத் திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார். இவர் ஆந்திர சினிமா வட்டாரத்தில் அதிகம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal and Anisha Reddy engagement

இந்நிலையில் விஷாலின் நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதற்கு விஷாலின் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுருந்தது.

Vishal and Anisha Reddy engagement

இதில் நடிகை குஷ்பு, சுந்தர் சி, ரமணா, மனோபாலா, நந்தா, ஸ்ரீமன், பசுபதி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அதைத்தொடர்ந்து இன்று மாலை விஷால் தனது நண்பர்களுக்குப் பெரிய பார்ட்டி கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vishal and Anisha Reddy engagement

மேலும், இந்த இளம் ஜோடியின் திருமணம் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஆனால் விஷால் தனது திருமணம் நடிகர் சங்க கட்டிடத்தில் நடைபெறும் என அறிவித்துருந்தார். தற்போது வரை கட்டிட வேலை இழுபறியாக உள்ளதால்,ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டிட வேலை முடியுமா? அல்லது விஷாலின் வார்த்தை பொய் ஆகுமா? என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கலாம்.