காதலியுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்த முகின் : வைரல் போட்டோ!

 

காதலியுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்த முகின் : வைரல் போட்டோ!

சம்மதித்து விட்டாரா ? என்று கேள்வி கேட்ட போது, எல்லாம் சரியாகி விட்டது ஓகே சொல்லிட்டாங்க என்று கூறினார் முகின்.

பிக் பாஸ்  3  நிகழ்ச்சியில் முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசியாவை  சேர்ந்த முகின் பாடல் பாடுவது, கலைநயமிக்க பொருட்கள் செய்வது என ஆரம்பத்தில் உற்சாகமாகக் காணப்பட்டார்.  போட்டியாளர்கள் தங்களை பற்றி அனைவர் மத்தியிலும் கூறிய போது, முகின்  சிறுவயதிலிருந்து தான் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறி அனைவரையும்  சோகத்தில் ஆழ்த்தினார். இதனால் முகினிடம் பாசம் காட்டிய அபிராமி பலமுறை தான் முகினை காதலிப்பதாக வெளிப்படையாக கூறினார். 

ஆனால் முகின் மலேசியாவில் நான்  நதியா என்பவரை காதலிக்கிறேன். நிகழ்ச்சி முடிந்து வந்ததும் அவர் தன் பதிலை சொல்வதாக கூறியிருக்கிறார் என்று கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முகினிடம்,  நதியாவிடம் கேட்டு விட்டீர்களா அவருடைய பதில் என்ன ?  சம்மதித்து விட்டாரா ? என்று கேள்வி கேட்ட போது, எல்லாம் சரியாகி விட்டது ஓகே சொல்லிட்டாங்க என்று கூறினார் முகின்.

mugen

இந்நிலையில் முகின்  மலேசியாவில் காதலி நதியாவுடன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதை கண்ட ரசிகர்கள்  விரைவில் உங்கள் திருமண புகைப்படத்தை காண ஆவலாக உள்ளோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.