காதலியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய முகின்…வைரல் போட்டோஸ்!

 

காதலியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய முகின்…வைரல் போட்டோஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருதலையாக இருந்த இவரது காதலுக்கு  நதியா பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

பிக் பாஸ்  3  நிகழ்ச்சியில் முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசியாவை  சேர்ந்த முகின் பாடல் பாடுவது, கலைநயமிக்க பொருட்கள் செய்வது என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார்.

ttn

முகின் மலேசியாவை சேர்ந்த நதியா என்பவரை காதலித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருதலையாக இருந்த இவரது காதலுக்கு  நதியா பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

ttn

இந்நிலையில் முகின்  நதியா இருவரும் காதலர் தினத்தை முன்னிட்டு  இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

ttn

இதை கண்ட முகின்  ரசிகர்கள்  இருவருக்கும் வாழ்த்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.