காதலிக்கு செலவு செய்ய பணம் திருடிய கூகுள் நிறுவன ஊழியர்: அதிர்ச்சி தரும் பின்னணி!

 

காதலிக்கு செலவு செய்ய பணம் திருடிய கூகுள் நிறுவன ஊழியர்: அதிர்ச்சி தரும் பின்னணி!

காதலிக்காக தாஜ் ஹோட்டலில் பணம் திருடிய கூகுள் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி:  காதலிக்காக தாஜ் ஹோட்டலில் பணம் திருடிய கூகுள் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி தாஜ் ஹோட்டலில், ஐபிஎம் மற்றும் பிற நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கான்ஃபிரன்ஸ் நடந்தது. இதில் கூகுள் நிறுவனம் சார்பாக கலந்து கொண்ட இளைஞர், அதே மீட்டிங்கிற்கு வந்த தேவயானி என்ற பெண்ணின் பணத்தைத் திருடியுள்ளார். இதனால் அவர்  ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளார்.
 
இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர்,  நிகழ்ச்சி நடந்த போது சேகரிக்கப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளைச் சோதித்து பார்த்துள்ளனர். சிசிடிவி காட்சியில் பணத்தை ஒரு நபர் திருடுவதும், அவர் டாக்ஸியில் ஏறிப் போவதும் பதிவாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து  போலீசார் அந்த நபரைக்  கைது செய்தனர்.

இது குறித்து தெரிவித்துள்ள டெல்லி துணை ஆணையர் மதூர் வர்மா, ‘பணத்தைத் திருடிய ஷகானி தன் காதலிக்கு செலவு செய்ய பணத்தேவை இருந்ததால் திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறினார். 10 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட நிலையில், கைது செய்யும்போது அவரிடம் ரூ.3000 மட்டுமே கிடைத்தது என்றும் விளக்கமளித்துள்ளார்.