காதலிக்காக சாண்டியை திட்டிய கவின்: அப்செட்டான சாண்டி!

 

காதலிக்காக  சாண்டியை திட்டிய கவின்: அப்செட்டான சாண்டி!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை:  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 79வது நாளை தொட்டுள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள், நண்பர்கள் என பிக் பலரும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவுள்ளனர். 

bb

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியா,   காஃபி  குடிச்ச ஆட்களெல்லாம் வாங்க என்று கூப்பிட அதற்கு சாண்டி நீ தலைவர் ஆனதும் உடனே வாங்க வேலை செய்யணும்னு சொல்லுறியே. இதுக்கு முன்னாடி அப்படி கூப்பிட்டு இருக்கியா என்று கேட்கிறார். அதற்கு லாஸ்லியா, எல்லாரும் சேர்ந்து செய்யணும்னு சொன்னதுனால தான் நான் கூப்பிட்டேன்.  என் வேலையை நான் சரியா தான் செய்யுறேன் என்று கூறி லாஸ்லியா கோபப்பட்டு எழுந்து செல்கிறார். உடனே சாண்டி நான் ஜாலியா தான் பேசுனேன்..லாஸு கோபிச்சிகிட்டியா என்று கேட்க உடனே கவின், ‘ஜாலி ஜாலின்னு நீ ஹர்ட் பண்ணிடுற’ என்று லாஸ்லியாவுக்கு ஆதரவாகப் பேசுகிறார். 

 

இத்தனை  நாட்கள் பிக் பாஸ் வீட்டில் கவினை விட்டுக்கொடுக்காமல் ஆதரவாக இருந்து வந்தது  சாண்டி மட்டும் தான். ஆனால்  இன்று லாஸ்லியாவுக்காக கவின் சாண்டியிடம்  கோபப்படுவது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.