காதலிக்காக கோடிகணக்கான சம்பளத்தை இழந்த இளைஞர்! அதிர்ச்சியடைந்த நிறுவனம்!

காதலிக்காக கோடிகணக்கான சம்பளத்தை இழந்த இளைஞர்! அதிர்ச்சியடைந்த நிறுவனம்!

காதலுக்கு கண் இல்லை என்பதெல்லாம் பழைய கதை. காதல் பார்த்து வந்த கோடிக்கணக்கான சம்பளத்தில் பார்த்து வரும் வேலையையும் தூக்கி எறிய வைக்கும் சம்பவம் பெரும் நிறுவனங்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. உலகம் முழுவதுமே இன்றும் மிக பிரபலமாக இருந்து வரும் மெக்டொனால்ட் நிறுவனத்தில் இத்தனை நாட்களாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள் ஒரு முக்கிய விதியை கடைபிடித்து வருகிறார்கள்.

macdonalds

காதலுக்கு எதிரான நிறுவனம் எல்லாம் மெக்டொனால்ட் கிடையாது. இத்தனைக்கும் இதன் உரிமையாளர் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார். அதனால் அவருக்கு காதலின் வலியும், காதல், கல்யாணத்துக்கு அப்புறம் செய்யும் வேலையும் நன்றாக தெரிந்திருக்கும் போல. அதனால், ஊழியர்களுக்கு நிறுனத்தைத் துவங்கிய போதே சில விதிமுறைகளை வகுத்திருக்கிறார். அதில் முக்கியமானது, மெக்டொனால்ட் நிறுவனத்தில்  பணிபுரிபவர்கள், அதிலும் குறிப்பாக, அந்நிறுவனத்தில் மேலாளர் பதவிக்கு மேல்நிலையில் உள்ள பதவிகளில் பணிபுரிபவர்கள், மெக்டொனால்ட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுடன் எந்த விதமான வெளி தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தான். அதாவது காதல், திருமணம், அக்கா, தங்கை என்று பாச மழை பொழிந்து வேஷம் போடுவது, ஈவினிங் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே காலாற நடந்து கடலைப் போடலாமா தோழி என்றெல்லாம் அசடு வழிந்து கொண்டிருக்க கூடாது. அவர்கள் எப்போதும் நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் மட்டும் தான் என்பது. அவர்களுடன் வேற எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது. இந்த விதியை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் தயவு பார்க்காமல் அவர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவார்கள்.  

steve

சமீபத்தில் மெக்டொனால்ட் நிறுவனத்தில் சிஇஓ வாக பதவி வகித்த ஸ்டீவ் ஈஸ்டர் ப்ரூக், அதே நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியருடன் காதல் வலை வீசத் தொடங்கினார். அவரும் சம்மதிக்கவே இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். இந்த குற்றச்சாட்டு எழுந்ததும், நிறுவனத்தின் விதிமுறை பற்றி நினைவூட்டி, காதலைக் கைவிடுகிறீர்களா… நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறீர்களா என்கிற கேள்விக்கு பதிலாக, தான் வாங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான சம்பளத்தையும் துச்சமென மதித்து பதவியில் இருந்து விலகி விட்டார் ஸ்டீவ். தற்போது மெக்டொனால்ட் நிறுவனத்தின் சிஇஓ பதவி விலகியதையும், காரணத்தையும் அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தகவலாக வெளியிட்டுள்ளார்.