காதலிக்காக களவாணியான காதலன் ! ஏடிஎம்மில் முதியவர்கள் பணம் அபேஸ் !

 

காதலிக்காக களவாணியான காதலன் ! ஏடிஎம்மில் முதியவர்கள் பணம் அபேஸ் !

ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் முதியவர்களை மட்டுமே குறிவைத்து ஏமாற்றி பணம் திருடிவந்த நபர் ராமநாதபுரத்தில் பிடிபட்டுள்ளார்.

ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் முதியவர்களை மட்டுமே குறிவைத்து ஏமாற்றி பணம் திருடிவந்த நபர் ராமநாதபுரத்தில் பிடிபட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமையன்று போலீசார் நடத்திய வாகன சோதனையில் பாரதி நகர் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த கோபி என்பவரை பிடித்து விசாரித்தனர். காரைக்குடி நெசவாளர் காலனியை சேர்ந்த கோபி, .டி.எம் களில் பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி பணம் திருடி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

atm

10 வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த கோபியை நம்பியும் ஒரு பெண் காதலித்து வந்தார். களவாடியாவது காதலை வளர்ப்பார் என அந்தப் பெண்ணுக்கு தெரிந்திருக்கும் போலும் !

தன்னுடைய காதலியிடம் தன்னை வசதி படைத்தவனாக காட்டிக்கொண்ட கோபி அதை அப்படியே மெயிண்டன் செய்ய நிறைய பணம் தேவைப்பட்டுள்ளது. தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கி காதலியுடன் உல்லாசமாக இருந்த கோபி ஒரு கட்டத்தில் அனைவரும் பணம் தருவதை நிறுத்தியதால் சட்ட விரோத செயல் செய்ய முடிவு எடுத்துள்ளார். இதனால் ஏ.டி.எம். களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல்  பணம் திருடி வந்துள்ளார் கோபி. தமிழகத்தின் பல்வேறு ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று எஸ்.பி. ஏடிஎம் மையங்களுக்கு வரும் முதியவர்களை மட்டுமே குறிவைத்து பணம் திருடி வந்துள்ளார். ஒவ்வொரு கொள்ளை சம்பவத்தின்போதும் ஒரு புது சட்டை வாங்கி அணிவது கோபிக்கு வழக்கம். எந்நேரமும் புதுசட்டையோடு வரும் கோபியை பார்த்த நண்பர்கள் நாளடைவில் அவரை புது சட்டை கோபி என பட்டப் பெயர் வைத்து செல்லமாக அழைக்கத் தொடங்கி விட்டனர். மேலும் பணம் திருடுவதிலும் தர்மம் கடைப்பிடிக்கும் கோபி ஒவ்வொரு முதியவர் கணக்கில் இருந்தும் அதிகபட்சம் 30,000 மட்டுமே எடுத்து வந்துள்ளார். இதுவரை கோபி 2,30,000 ரூபாய் வரை கொள்ளையடித்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

விபரம் தெரியாத முதியவர்கள் அறிமுகம் இல்லா நபரிடம் ஏடிஎம் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை பகிர்ந்து கொள்ள கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்.