காதலர் தின ஸ்பெஷல்… பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை காதலில் லயித்து போகலாம் வாங்க!

 

காதலர் தின ஸ்பெஷல்… பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை காதலில் லயித்து போகலாம் வாங்க!

உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

பிப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் ஏற்ற தருணமாக இளைஞர்கள் இதனைக் கருதுகின்றனர். குறிப்பாக உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

காதலர் தினத்துக்கு பல்வேறு வரலாறுகள் கூறப்பட்டாலும், கி.பி. 3-ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசன் இரண்டாம் கிளாடியஸ் காலத்து வரலாறு தான் பிரதானம். திருமணத்துக்குத் தடைவிதித்து பேரரசன் பிறப்பித்த ஆணையை மீறி காதலர்களை இணைத்து வைத்ததற்காகப் பாதிரியார் வாலண்டைனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14.

 

மேற்குலக நாடுகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்ட பிப்ரவரி 14- காதலர் தினம் என்பது இந்தியாவின் தாராளமயப் பொருளாதாரக் கதவுகள் திறக்கப்பட்ட காலத்தில் குடியேறிவிட்டது. ஆண்டுதோறும் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டத்தைப் போல் இளைஞர் பட்டாளம் “ஆதலால் காதல் செய்வீர் ” என்று கொண்டாடி மகிழ்கின்றனர்.

 

ஆதாம்-ஏவாள் காலத்திலிருந்து இன்றைய இளசுகள் வரை காதலை சுமக்காத தலைமுறையே இருந்தது இல்லை. அப்படிப்பட்ட காதலை ஒருநாள் கொண்டாடினால் போதுமா? போதாது.. எனவே, காதலை அணு அணுவாக ரசித்து கொண்டாடுவதற்காக உருக்கப்பட்டதுதான் காதலர் தினக் காலண்டர். பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை ஒரு வாரம் காதலில் லயித்து போகலாம். 

காதலர்களால் கொண்டாடப்பட்டு வரும்  தினங்கள்! 

ttn

  • பிப்.7-ம் தேதி ​ரோஸ் டே (rose day)
  • பிப்.8-ம் தேதி ​புரப்போஸ் டே (propose day)
  • பிப்.9-ம் தேதி சாக்லேட் டே  (Chocolate day)
  • பிப்.10-ம் தேதி டெடி டே  (teddy day)
  • பிப்.11-ம் தேதி வாக்குறுதி தினம் (Promise Day)
  • பிப்.12-ம் தேதி கட்டிப்பிடி தினம் (Hug Day)
  • பிப்.13-ம் தேதி முத்த தினம் (kiss day)

பிப்ரவரி 14 என்பது கடைசி நாள். ஆனால் உங்கள் காதலுக்கு அல்ல. காதலர் தினத்தை கொண்டாட தயாராகுங்கள். உங்கள் இணைப்பை அர்த்தமானதாக மாற்றுங்கள். உங்களது இணையை மகிழ்ச்சியாக உணர செய்யுங்கள். காதலை கொண்டாடுங்கள்…”ஆதலால் காதல் செய்வீர் ”