காதலர் தின பரிசாக மனைவியை கொன்ற கணவர்: 15 வருடங்களுக்கு பிறகு கைது செய்த காவல்துறை!

 

காதலர் தின பரிசாக மனைவியை கொன்ற கணவர்: 15 வருடங்களுக்கு பிறகு கைது செய்த காவல்துறை!

காதலிக்கு தன் காதலர் தின பரிசாக தன் மனைவியைக் கொலை செய்த நபரை 15ஆண்டுகளுக்குப் பிறகு  போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர்: காதலிக்கு தன் காதலர் தின பரிசாக தன் மனைவியைக் கொலை செய்த நபரை 15ஆண்டுகளுக்குப் பிறகு  போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

கேரளாவைப் பூர்வீகமாக கொண்டவர் தருண். இவர் பல ஆண்டுகளாக அகமதாபாத்தில் வசித்து வந்துள்ளார். 2003ம் ஆண்டு வங்கி ஊழியர் ஒருவருடன் தருணுக்கு திருமணமாகியுள்ளது. மணமான 3 மாதத்தில் தருணின் மனைவி இறந்து போக தனது மனைவியைக் கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் விசாரணையில்  தனது காதலிக்கு காதலர் தின பரிசாக மனைவியையே தருண் கொலை செய்துள்ளார் என்று போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து  தப்பிச்சென்ற தருண் டெல்லியிலும், புனேவிலும் வேலை பார்த்துள்ளார். தனது பெயரை பிரவீன் என மாற்றி தனது அடையாளங்களையும் மாற்றியுள்ளார். இந்த வழக்கு 15 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது.

இதையடுத்து  விசாரணையில் துப்பு ஏதும் கிடைக்காத நிலையில் தருணின் தாயார் அன்னம்மாவை போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். அன்னம்மா அடிக்கடி கேரளாவுக்கும் பெங்களூருவுக்கும் சென்று வருவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பெங்களூருவுக்கு ஏன் செல்கிறார் என்ற கோணத்தில் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணை நடத்திய போது அது தனியார் நிறுவனத்தின் தொலைபேசி எண்ணாக இருந்துள்ளது. 

இதனால் தீவிர விசாரணை செய்த போலீசார் போலி பெயரில் தருண் வேலை பார்த்து வருவதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கிரண் சவுத்ரி,  தருணின் அலுவலகத்திற்கே ஊழியர் வேடத்தில் சென்று தருணை கையும் களவுமாகக் கைது செய்துள்ளார். கைதுக்குப் பின்னர் வாக்குமூலம் அளித்த தருண் மனைவியைத் தானே கொலை செய்ததாகவும், அடையாளங்களை மாற்றி வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.