காதலர் தின கொண்டாட்டம்; OYO-வில் 90.57% ரூம் புக்கிங் அதிகரிப்பு 

 

காதலர் தின கொண்டாட்டம்; OYO-வில் 90.57% ரூம் புக்கிங் அதிகரிப்பு 

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடவுள்ள நிலையிலல் OYO செயலி மூலம் ஹோட்டல் ரூம் புக்கிங் 90.57 சதவீதம் அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடவுள்ள நிலையிலல் OYO செயலி மூலம் ஹோட்டல் ரூம் புக்கிங் 90.57 சதவீதம் அதிகரித்துள்ளது. 

காதலர் தினம் என்றாலே சாக்லேட்டுகள், ரோஜாக்கள், கிரீட்டிங் கார்டுகள், டின்னர் டேட்டுகள் என எந்த பக்கம் திரும்பினாலும் நகரம் முழுவதும் ஒரே கொண்டாட்டமாக இருக்கின்ற நிலையில், ரூம் புக்கிங்களும் விறுவிறுப்பாக ஒருபுறம் அரங்கேறிவருகிறது. பெரு நகரங்களில் ஹோட்டல்களில் ரூம் கிடைப்பது டிமாண்ட்டாகிவிட்டது.  ஏராளமான காதலர்கள் அதிகளவில் OYO செயலி மூலம் ஹோட்டல் ரூம்களில் முன்பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

சமீபகாலமாக நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்த தங்கும் விடுதிகள் இந்த வாரத்தில் மீண்டும் புத்துணர்வு அடைந்துள்ளதாக ஹோட்டல் ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். OYO செயலி மூலம் 90.57% சதவீத ரூம்கள் முன்பதி செய்யப்பட்டிருப்பதாகவும், மும்பை, கொல்கத்தா போன்ற மாநகரங்களிலேயே அதிகமான ரூம்கள் புக்கிங் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலர்களையும், காதலர் தினத்தை எதிர்க்கும் இந்துத்துவா கும்பல்களுக்கு மத்தியில் அன்றைய தினத்தை நிம்மதியாக கொண்டாட காதலர்கள் ஹோட்டல்களை நாடி செல்வதாக கூறப்படுகிறது. OYO நிறுவனமும் தனது சமூக வலைதளங்களில் #StayInLove, #ValentinesTogetherAlone மற்றும் #CheckInForLove போன்ற ஹேஷ்டாக்குகளை உருவாக்கி காதலர் தினத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவருகிறது.