காதலர் தினம்: மகளிர் கல்லூரி மற்றும் பூங்காக்களில் காவி கும்பல் ரெய்டு?

 

காதலர் தினம்: மகளிர் கல்லூரி மற்றும் பூங்காக்களில் காவி கும்பல் ரெய்டு?

காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கும் வகையில் பஜ்ரங்தளம் அமைப்பு சில திட்டங்களை தீட்டியுள்ளது.

டேராடூன்: காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கும் வகையில் பஜ்ரங்தளம் அமைப்பு சில திட்டங்களை தீட்டியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள பஜ்ரங்தள அமைப்பு காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில திட்டங்களை தீட்டியுள்ளது. அதன்படி காதலர் தினத்தன்று 250-க்கும் அதிகமான பஜ்ரங்கதள உறுப்பினர்கள், மகளிர் கல்லூரி மற்றும் பூங்காங்களில் ரெய்டு நடத்த இருக்கிறார்கள். அதேபோல் காதலர்கள் நெருக்கமாய் இருப்பதை வீடியோ ஷூட் செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.

இதுகுறித்து பஜ்ரங்கதள அமைப்பாளர் விவேக் வர்மா, “ நாங்கள் எடுக்கும் வீடியோவில் உள்ள முகத்தை மறைத்து விடுவோம். இது எங்களுக்கு ஆதாரமாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளுவோம். எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் காதல் ஜோடிகளுக்கு தொல்லை கொடுப்பதாக சொல்கிறார்கள். ஆனால் பொது இடங்களில் நெருக்கமாக இருப்பவர்களை மற்றும் நாங்கள் விரட்டி அடிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்வேதா சவ்பே, எந்த அமைப்பை சார்ந்தவர்களையும் பிறரை துன்புறுத்தவோ, வீடியோ எடுக்கவோ அனுமதிக்க மாட்டோம். காதலர் தினத்தை முன்னிட்டு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.