காதலர் தினத்தில் விருந்தளிக்க வரும் ‘போகாதே…’ பாடல்! ஏ.ஆர். ரஹ்மான் மருமகன் இசையில்…

காதலர் தினத்தில் விருந்தளிக்க வரும் ‘போகாதே…’ பாடல்! ஏ.ஆர். ரஹ்மான் மருமகன் இசையில்…

‘போகாதே’ என்ற மியூசிக் வீடியோ காதலர் தினத்தன்று வெளியிடப்பட இருக்கிறது. இந்த ஆல்பத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகன் ஏ.எச்.காஷிஃப் இசையமைத்துள்ளார். கடந்த நான்கு வருடங்களில் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், விஷால் தத்லானி, ஜொனிதா காந்தி போன்ற கலைஞர்களுடன் இணைந்து பல இண்டிபெண்டெண்ட் மியூசிக் விடீயோக்களை தயாரித்துகிறார் ஏ.எச்.காஷிஃப். இவர் வெளியிட்ட எல்லா வீடியோக்களும் 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன!

ah

ஜோதிகாநடித்த ‘காற்றின் மொழி’ மற்றும்  மம்மூட்டியின்  ‘18 ஆம் படி’ படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். 

‘போகாதே’  மியூசிக் வீடியோ ‘லஹாரி மியூசிக்’ என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட இருக்கிறது.  இந்த வீடியோவை, அஸ்வின் ராம்  என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் அட்லியிடம் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

ah

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் பணியாற்றிய கவின் ராஜ் இந்த வீடியோவிற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கோமாளி படத்தின் எடிட்டர்  பிரதீப் இ ராகவ் எடிட் செய்துள்ளார். இந்த மியூசிக் வீடியோவில் அனந்த் மற்றும் வாஃபா கதீஜா ஆகியோர் நடித்துள்ளனர்.மோகன் ராஜன் என்பவர் பாடலை எழுதியுள்ளார். ஏ.எச். காஷிஃப் & ஜோனிதா காந்தி இந்த பாடலை பாடியுள்ளனர்.