காதலரை கரம் பிடித்த பாப் பாடகி மைலி சைரஸ்..!

 

காதலரை கரம் பிடித்த பாப் பாடகி மைலி சைரஸ்..!

பிரபல அமெரிக்க பாப் பாடகியும், நடிகையுமான மைலி சைரஸ் தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடித்தார்.

பிரபல அமெரிக்க பாப் பாடகியும், நடிகையுமான மைலி சைரஸ் தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடித்தார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது நீண்ட நாள் காதலரான ஹாலிவுட் நடிகர் லியம் ஹெம்ஸ்வொர்த்தை மைலி சைரஸ் திருமணம் செய்துக் கொண்டார். மைலி சைரஸ் மற்றும் ஹெம்ஸ்வொர்த்தின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

This is probably our one – millionth kiss ….

A post shared by Miley Cyrus (@mileycyrus) on

‘ஹங்கர் கேம்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த லியம் ஹெம்ஸ்வொர்த்தும் பாடகி மைலி சைரஸும் சுமார் 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணம் டென்னஸ்சியின் ப்ரான்க்ளின் எனும் இடத்தில் உள்ள காஸ்ட்லி மேன்ஷனில் நடைபெற்றது.

மைலி சைரஸின் திருமணம் குறித்த புகைப்படங்களில் கேக் வெட்டும் புகைப்படங்களும், அங்கு அலங்கரிக்கப்பட்டுள்ள மிஸ்டர்/மிஸஸ் போஸ்டர்களே இவர்களது திருமணத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 

mileycyrus