காதலரை கரம்பிடிக்கும் ‘விஜய் டிவி’ கேப்ரில்லா: நிச்சயதார்த்தம் ஓவர், கல்யாணம் எப்போ தெரியுமா?

 

காதலரை கரம்பிடிக்கும் ‘விஜய் டிவி’ கேப்ரில்லா: நிச்சயதார்த்தம் ஓவர், கல்யாணம் எப்போ தெரியுமா?

நடிகை கேப்ரில்லாவுக்கு தனது நீண்ட நாள் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. 

நடிகை கேப்ரில்லாவுக்கு தனது நீண்ட நாள் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. 

gaprilla

சின்னதிரை காமெடி நிகழ்ச்சியில் தோன்றியவர் கேப்ரில்லா. அந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த கேப்ரில்லா நயன்தாராவின் ஐரா படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து பல குறும்படங்களிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக டிக் டோக்கில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை அவரது ரசிகர்கள் கறுப்பழகி என்றே அழைக்கின்றனர். 

gaprilla

இந்நிலையில் நடிகை கேப்ரில்லா தனது நீண்டநாள் காதலரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்து பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இவர், என்னுடைய துறையில் இருக்குறவங்களால  தான்  என்னை புரிஞ்சிக்க முடியும்.  அவர் பெயர் ஆகாஷ். சினிமாட்டோகிராபரா இருக்கார். நாங்க ரெண்டு பேருமே ஒரே மாதிரியான சிந்தனைகளை கொண்டவங்க. அவர் என் நடிப்பை பார்த்துட்டு பாராட்டவும் செய்வார். அதே சமயம் குறையும் சொல்வார். அவர் கிடைச்சதுனால நான் ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு தான் சொல்லுவேன்’ என்றார்.

gaprilla

தொடர்ந்து பேசியுள்ள அவர், அவருடைய அப்பா நக்கீரன் பத்திரிகையில் தலைமைப் பொறுப்பில் இருக்காரு.  அம்மா ஹவுஸ் ஒயிஃப். நான் தான் ஆகாஷ்  அப்பாக்கு கால்பண்ணி  நாங்க காதலிக்குறோம்னு சொன்னேன். ஆனால்  அவரோ, புதுசா ஏதாவது சொல்லுமான்னு சொன்னாரு. அவங்க மலையாளி இந்து. நாங்க கிறிஸ்டியன். இருந்தாலும் எங்க காதலுக்கு எங்க ரெண்டு பேரு  வீட்டிலேயும் எந்த எதிர்ப்பும் இல்ல. இப்போ நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சி. கல்யாணம் ஜனவரி மாசம் வச்சிக்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்காங்க’ என்று தெரிவித்துள்ளார்.