காதலருடன் ஜோடி சேருகிறாரா பிக் பாஸ் ஜூலி?

 

காதலருடன் ஜோடி சேருகிறாரா பிக் பாஸ் ஜூலி?

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி தனது அடுத்தப்படம் குறித்த ட்வீட்டை பகிர்ந்து ஜூலி வெறியர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி தனது அடுத்தப்படம் குறித்த ட்வீட்டை பகிர்ந்து ஜூலி வெறியர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பிரபலமான மரியா ஜூலியானா, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சர்ச்சைக்குரிய முழக்கங்களை எழுப்பி விமர்சிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புக் கிடைத்த ஜூலி, அதை மிகவும் சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டார்.

julie

மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டாலும், ஜூலிக்கு அவர் விருப்பம் போல் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜூலி ஒப்பந்தமான ‘அம்மன் தாயி’ படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீசாகி வைரலானது. இதைத் தொடர்ந்து மருத்துவ கல்வி கணவால் தற்கொலை செய்துக் கொண்டர் மாணவி அனிதாவின் கதையில் அனிதா கேரக்டரில் நடிக்கிறார்.

julie

இவ்விரு திரைப்படங்களின் ரிலீஸ் குறித்தும் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், தான் நடிக்கும் 3வது திரைப்படம் குறித்த அறிவிப்பை ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஜூலிக்கு ஜோடியாக அவரது நெருங்கிய நண்பரும், காதலருமான மார்கம்ரான் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் எழில்துரை என்பவர் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜூலிக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிவதால் ஜூலி வெறியர்கள் செம ஹாப்பியாக உள்ளனராம்.