காதலனை கரம் பிடித்தார் பிக் பாஸ் வைஷ்ணவி!

 

காதலனை கரம் பிடித்தார் பிக் பாஸ் வைஷ்ணவி!

பிக் பாஸ் வைஷ்ணவிக்கு இன்று தனது காதலருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: பிக் பாஸ் வைஷ்ணவிக்கு இன்று தனது காதலருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் RJ வைஷ்ணவி. அதில் பங்குபெற்ற சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாகக் கூறி பார்வையார்களியிடயே மிகவும் வெறுப்பை சம்பாதித்து பாதி போட்டியிலிருந்து வெளியேறினார். 

இவரும் விமானியாக பணி புரிந்து வரும் அஞ்சன் என்பவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். அது மட்டுமின்றி இரண்டு வருடங்களாக இருவரும் லிவிங் டுகேதார் முறையில் வாழ்ந்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் திடீரென்று இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த நிகழ்வில் வெறும் நெருங்கிய நண்பர்களை மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமணக் கோலத்தில் இருக்கும் அவர்களுடைய புகைப்படங்களை வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.