காண்ட்ராக்டரை பெயரோடு இணைத்துக்கொண்ட நெட்டிசன்கள்! நேசமணி மீதான நேசம்!!

 

காண்ட்ராக்டரை பெயரோடு இணைத்துக்கொண்ட நெட்டிசன்கள்! நேசமணி மீதான நேசம்!!

நேற்று முதல் டுவிட்டரில் டிரெண்டிங்காக இருப்பது நேசமணி, #Pray For Nesamani என்பது தான். இந்நிலையில் தற்போது ட்விட்டரில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தனது கணக்கு பெயருக்கு முன் காண்ட்ராக்டர் என சேர்த்து அட்ராசிட்டி செய்துவருகின்றனர். 

நேற்று முதல் ட்விட்டரில் கலங்கடித்துவருவது நேசமணி, #Pray For Nesamani என்பது தான். இந்நிலையில் தற்போது ட்விட்டரில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தனது கணக்கு பெயருக்கு முன் காண்ட்ராக்டர் என சேர்த்து அட்ராசிட்டி செய்துவருகின்றனர். 

yy

மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். எதிர்கட்சியினரை வீழ்த்த பலவிதமான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் பிரதமர் மோடி முன்வைத்தார். அதில் ஒன்று தான் ‘சவுகிதார்’ முழக்கம். ‘சவுகிதார்’ என்ற சொல்லுக்கு ‘காவலாளி’ என்று அர்த்தம். மக்களுக்கு எதிரான ஊழல், லஞ்சம், முறைகேடுகளை எதிர்த்து பாஜகவினர் அனைவரும் சவுகிதார்களாக மாற வேண்டும் என்பதே மோடியின் முழக்கமாக இருந்தது. இதை தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி என்ற தனது பெயருக்கு முன் ‘சவுகிதார்’ என்ற அடைமொழியை சேர்த்துக் கொண்டார்.

pp

பிரதமர் மோடியின் இந்த ‘சவுகிதார்’ முழக்கம் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பையும், எதிர்கட்சியினரிடமிருந்து கடும் விமர்சனத்தையும் பெற்றது. ரஃபேல் ஊழல் வழக்கு எதிராக பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘சவுகிதார் சோர் ஹை’ என்று எல்லாம் விமர்சித்து இருந்தார். இதையடுத்து பாஜகவினர் அனைவரும் அவர்களது பெயருக்கு பின்னால் சவுகிதார் என்ற அடைமொழியை சேர்த்தனர். தேர்தல் வெற்றிக்கு பின் அவற்றை நீக்கிவிட்டனர். 

qq

இந்நிலையில் தற்போது காண்ட்ராக்டர் நேசமணியின் டுவிட்கள் வைரலாகி வரும் சூழ்நிலையில் பலர் தங்களது ட்விட்டர் கணக்கு பெயருக்கு முன்பு காண்ட்ராக்டர் என்ற சொல்லை சேர்த்துள்ளனர். இவ்வாறு தங்கள் பெயருக்கு முன்பு காண்ட்ராக்டர் என்ற சொல்லை சேர்த்து நேசமணிக்கு தங்களது நேசத்தை காட்டிவருகின்றனர்.