காண்டாமிருகங்களை காப்பாற்ற புது முகபாவனையுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ! நிதி திரட்ட புது யுக்தி !

காண்டாமிருகங்களை காப்பாற்ற புது முகபாவனையுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ! நிதி திரட்ட புது யுக்தி !

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் தனது புதுவித முகபாவனையை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் ஜாக் காலிஸ். இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில் புதுவிதமான தோற்றத்துடன் ஒரு புகைப்படத்தை இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

jacques kallis

அதில் தனது மீசை, தாடியின் ஒரு பாதியை மட்டும் எடுத்துவிட்டு, மீதியிருக்கும் பாதி பக்கத்தை எடுக்காமல் உள்ளார் ஜாக் காலிஸ். இந்த புகைப்படத்தை பார்த்த ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இது என்ன புது தோற்றம் என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறிய காரணம் அனைவரையும் நெகிழ்ச்சியுற செய்துள்ளது.

rhinocers

தென் ஆப்பிரிக்காவில் வாழும் காண்டாமிருகங்களைப் பாதுகாக்கவும், அதற்காக நிதி திரட்டவும் இது போன்ற தோற்றத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இனி வரும் காலங்கள் மிகவும் சுவாரஸ்மாக இருக்கும் என்றும் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்றும் ஜாக் காலிஸ் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார். ஜாக் காலிஸ் இந்த புகைப்படம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

kaalis

தென்ஆப்பிரிக்காவில் சுமார் 25,000 காண்டா மிருகங்கள் வாழ்கின்றன. உலகில் 80 சதவீத காண்ட மிருகங்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ளன. சமீப ஆண்டுகளாக இதனை வேட்டையாடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கடந்த 10 ஆண்டுகளில் 8,000க்கும் அதிகமானவை கொல்லப்பட்டுள்ளன.