காணும் பொங்கல் கொண்டாட்டம்! குப்பைக்கூடமாக மாறிய சென்னை

காணும் பொங்கல் கொண்டாட்டம்! குப்பைக்கூடமாக மாறிய சென்னை

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு பின்னரும் சென்னையில் குப்பைகள் ஒழிந்தபாடில்லை என்ற வார்த்தையை நிஜமாக்கி சென்றுள்ளது காணும் பொங்கல். 

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு பின்னரும் சென்னையில் குப்பைகள் ஒழிந்தபாடில்லை என்ற வார்த்தையை நிஜமாக்கி சென்றுள்ளது காணும் பொங்கல். 

சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரையில் பொதுமக்கள் அதிகம் கூடினர்.  குறிப்பாக வண்டலூர் உயிரியியல் பூங்கா, மாமல்லபுரம், பெசண்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடி காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

marina beach

இதனால் சென்னையே குப்பை கூடமாக மாறியுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆறு சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 160க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சென்னை முழுவதும் 25.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும்,  மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பையும், பெசண்ட் நகரில் 10 மெட்ரிக் டன் குப்பையும் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.