‘காணாமல் போன வாய்க்காலை கண்டுபிடித்துத் தாருங்கள்’ : இளைஞர்கள் மனு!

 

‘காணாமல் போன வாய்க்காலை கண்டுபிடித்துத் தாருங்கள்’ : இளைஞர்கள் மனு!

1911 ஆம் ஆண்டு தண்ணீர் தேவைக்காகப் பெரம்பலூரில் 40 அடி அகலத்தில் ஜார்ஜ் என்னும் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.

1911 ஆம் ஆண்டு தண்ணீர் தேவைக்காகப் பெரம்பலூரில் 40 அடி அகலத்தில் ஜார்ஜ் என்னும் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இருந்து வந்த, அந்த வாய்க்காலைக் காணவில்லை என்றும் அதனை மீட்டுத் தர வேண்டும் என்றும் பெரம்பலூரைச் சேர்ந்த இளைஞர்கள் அமைப்பு, உலகத் தமிழர் பேரவை மற்றும் நீர் வழி உறவு என்னும் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். 

இளைஞர்கள்

அந்த மனுவில், ‘ பெரம்பலூர் பகுதியில் உள்ள தெப்பக் குளத்திற்கு நீர் வரும் வகையில் 1911 ஆம் ஆண்டு 40 அடி அகலத்தில் ஜார்ஜ் வாய்க்கால்  கட்டப்பட்டுள்ளது. அதனை தற்போது காணவில்லை. அதனை உடனடியாக கண்டுபிடித்துத் தாருங்கள்’ என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்துப் பேசிய இளைஞர்கள், பல கலாமாக மக்கள் பயன்படுத்தி வந்த அந்த கால்வாயைத் தனியார் அமைப்புகளைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பு செய்ததால் அந்த ஜார்ஜ் வாய்க்கால் தற்போது காணவில்லை என்று கூறியுள்ளனர்.