காட்டு யானை தாக்கியதில்…பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவி

 

காட்டு யானை தாக்கியதில்…பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவி

வெய்யில் தாக்கம் அதிகமாக இருப்பதால் வன விலங்குகள்,உணவுக்காகவும் தண்ணீர் தேடியும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது.பெரும்பாலும் அசம்பாவிதங்கள் நடப்பது குறைவு.நேற்று அப்படி வெளிவந்த ஒரு காட்டு யானை தாயின் கண்முன்னே குழந்தையைத் தாக்கியதில்,குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

வெய்யில் தாக்கம் அதிகமாக இருப்பதால் வன விலங்குகள்,உணவுக்காகவும் தண்ணீர் தேடியும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது.பெரும்பாலும் அசம்பாவிதங்கள் நடப்பது குறைவு.நேற்று அப்படி வெளிவந்த ஒரு காட்டு யானை தாயின் கண்முன்னே குழந்தையைத் தாக்கியதில்,குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

elephant

 
பொள்ளாச்சியை  அடுத்துள்ள  ஆழியாரில் நவமலை பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது.அங்கே குடியிருப்பவர் ராஜூ.வேட்டை  தடுப்பு காவலராகப் பணியாற்றுகிறார்.இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.பெயர்-ரஞ்சனா (எ) ரஞ்சனி.குடியிருப்பு பகுதி இருக்கும் ஏரியாவில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
 
சம்பவம் நடந்த அன்று, சித்ரா தனது மகளோடு பொள்ளாச்சி போய்விட்டு, பஸ்ஸில் நவமலைக்கு திரும்பி வந்திருக்கிறார்.பஸ் ஸ்டாப்பில் இறங்கி குடியிருப்பு பகுதியை நோக்கி இருவரும் நடந்து போயிருக்கிறார்கள். அப்போது காட்டுப் பகுதியிலிருந்து வெளி வந்த யானையைப் பார்த்ததும் தாய்,மகள் இருவரும் அலறியபடியே தப்பித்து ஓட ஆரம்பித்திருக்கிறார்கள்.

elephant attack

 
அலறியடித்து ஒடிய சிறுமி ரஞ்சனாவை யானை தாக்கியது.சித்ரா கதறி அழுத சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்திருக்கிறார்கள். கூட்டமாக ஆட்கள் வருவதைப் பார்த்ததும் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
 

school girl

அதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த சிறுமியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
காட்டு யானை தாக்கி தாய் கண்முன்னே யானை தாக்கி மகள் இறந்த சம்பவம் அப்பகுதி மலைவாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!