காட்டுமிராண்டிகளின் தலைநகரம் உன்னாவ்! 11  மாதத்தில் 86  பாலியல் வழக்குகள் பதிவு

 

காட்டுமிராண்டிகளின் தலைநகரம் உன்னாவ்! 11  மாதத்தில் 86  பாலியல் வழக்குகள் பதிவு

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் அதிகபட்சமாக பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளது என்றும் அது பாலியல் குற்றவாளிகளின் தலைநகர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகே உள்ள சிறு நகரம் உன்னாவ். இங்கு 31 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். உன்னாவ் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த குல்தீப் சிங்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் அதிகபட்சமாக பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளது என்றும் அது பாலியல் குற்றவாளிகளின் தலைநகர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rape

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகே உள்ள சிறு நகரம் உன்னாவ். இங்கு 31 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். உன்னாவ் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த குல்தீப் சிங். இவரிடம் வேலை கேட்டு சென்ற 16 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக குல்தீப் செங்கார் என்ற அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணின் தந்தை சிறையில் உயிரிழந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் சென்ற கார் மீது லாரி மோதியது. இதில் அந்த பெண்ணின் தாய், உறவினர் உயிரிழந்தார். தற்போது, அந்த பெண்ணும் தீ வைத்து எரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். 
இங்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பாலியல் பலாத்கார வழக்குகளும், 185 பாலியல் சீண்டல் வழக்குகளும் பதிவாகி உள்ளது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு பாலியல் வன்முறை எல்லாம் பெரிய விஷயம் இல்லை என்று கூறும் அளவுக்கு போலீஸ் நடவடிக்கை இருந்ததே காரணம் என்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஜாமீனில் விடுதலையாகிவிடுவார்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே போலீஸ் செயல்பட்டு வந்துள்ளது.

women

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராகவ் சுக்லா கூறுகையில், “உன்னாவ் காவல்துறை சீர்கெட்டுள்ளது. அரசியல்வாதிகள் உத்தரவின்றி ஒரு இன்ச் கூட நகரமாட்டார்கள். இதனால்தான் குற்றவாளிகள் எந்த ஒரு பயமும் இன்றி இவ்வளவு குற்றங்களையும் அரங்கேற்றுகின்றனர். மாநிலத்தின் மிகப்பெரிய அரசியல்வாதிகள் எல்லாம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக குற்றங்களை அனுமதிக்கின்றனர்” என்றார்.
குல்தீப் செங்கார் விவகாரத்தில் குற்றம் நடந்து ஒன்பது மாதங்கள் வழக்கே பதிவு செய்யப்படவில்லை. அவருடைய தந்தையை மிகப்பெரிய குற்றவாளிபோல அடித்து தரையில் இழுத்துச் சென்றது போலீஸ். இதுவரை வந்த புகார்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறுவதற்கு எந்த ஒரு ஆதாரமும் உன்னாவ் போலீசிடம் இல்லை. தற்போது கூட குற்றவாளிகள் பெயிலில் வருகிறார்கள் என்று தெரிந்தும் அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்காமல் விட்டுள்ளது உன்னாவ் போலீஸ். அவர்கள் சௌகரியமாக எரித்துவிட்டார்கள். இனி என்ன எல்லாம் கொடுமை நடக்குமோ… இந்த போலீசை யார்தான் தட்டிக்கேட்பார்களோ என்ற பொது மக்கள் புலம்புகின்றனர்.