காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 2000 கோலா கரடிகள் !

 

காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 2000 கோலா கரடிகள் !

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிபத்து ஏற்பட்டது. இ

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் கருகி நாசமாகின.

fire

அதுமட்டுமன்றி, இந்த விபத்தில் 4 பேர் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த 500 வீடுகள் நாசமாகிவிட்டன. விபத்து நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் காட்டுத்தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்னும் தீ எரிந்து கொண்டே இருக்கிறது. 

ttn

காடுகளில் வசித்து வந்த உயிரினங்களின் நிலை இந்த விபத்தால் கவலைக்கிடமாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் விதமாக இந்த விபத்தில் சுமார் 2000 கோலா கரடிகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில்,சூழலியல் நிபுணர் ஒருவர் ”  நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் எரிந்து வரும் காட்டுத்தீயில் அங்கு வசிக்கும் கோலா கரடிகளின் வாழ்விடம் முற்றிலுமாக அழிந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.