காடு ‘வா வா’ங்குது, இந்த வயசுல உனக்கு இது தேவையா பெருசு?

 

காடு ‘வா வா’ங்குது, இந்த வயசுல உனக்கு இது தேவையா பெருசு?

பருப்பு வியாபாரம் பண்றவங்களைகூட பாபாவா ஏத்துக்குறது எல்லா ஊர் பெண்களுக்கும் சுலபமாக வரும்போல. மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனான மெல், என் மகளிடம் தவறாக நடந்துகொள்ள வாய்ப்பில்லை என்று நம்பிய அத்தாய், தன் மகளை விமான வகுப்புக்கு அனுப்பி இருக்கிறார்

“என் புள்ளைக்கி ஏரோப்ளேன் ஓட்டுவதற்கு கத்துக்கொடுங்க” என்று 15 வயது சிறுமியை ஒரு தாய் விமானியிடம் விட்டுசென்றிருக்கிறார். இல்லை இல்லை நம்ம ஊரில் இல்ல. இங்கதான், கார் டிரைவிங் கிளாஸுக்கு அனுப்புனா கத்துக்குடுக்குறவன் கைப்படும்னு நம்ம வீட்டு பிள்ளைங்களைத்தான் கடைசி வரைக்கும் பின் சீட்லயே உட்கார வச்சிடுறோமே. இது நடந்தது அமெரிக்காவில். விமானியும் லேசுபட்ட ஆளல்ல, பெரிய பணக்காரர்.

Pilot

அமெரிக்க குழந்தைகளை அவசர மருத்துவசிகிச்சைக்காற்காக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்து செல்வதற்கென்றே பிரத்யேகமாக விமான நிறுவனம் நடத்தி வருகிறார் 53 வயதான ஸ்டீபன் மெல். பருப்பு வியாபாரம் பண்றவங்களைகூட பாபாவா ஏத்துக்குறது எல்லா ஊர் பெண்களுக்கும் சுலபமாக வரும்போல. மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனான மெல், என் மகளிடம் தவறாக நடந்துகொள்ள வாய்ப்பில்லை என்று நம்பிய அத்தாய், தன் மகளை விமான வகுப்புக்கு அனுப்பி இருக்கிறார்.

US Millionaire Mell

தன்னுடைய கீர்த்தியை காட்டும்விதமாக, பறந்தாலும் விடமாட்டேன், பிறர்  கையில் தரமாட்டேன்னு பாட்டெல்லாம் பாடி அசத்திய மெல், ஒரு கட்டத்தில் விமானத்தை ஆட்டோபைலட் மோடில் போட்டுவிட்டு 15 வயது பெண்ணுடன் மன்மத  மோடுக்கு மாறிவிட்டார். சிறுமியுடன் தகாத உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது. எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு செல்லவேண்டிய நிலையில், அன்னாரின் தற்போதைய காலர் ட்யூன் “உள்ளே உள்ள அத்தனை பேரும் குற்றவாளி இல்லீங்க, வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க”தான்