காடு வாவா என்கிறது வீடு போ போ என்கிறது இப்ப அரசியல் தேவையா? செல்லூர் ராஜூ கலாய் 

காடு வாவா என்கிறது வீடு போ போ என்கிறது இப்ப அரசியல் தேவையா? செல்லூர் ராஜூ கலாய் 

காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது, இன்னும் இரண்டு படங்கள் நடித்து அது தோல்வியடைந்தால் ரஜினி, கமல் மட்டுமல்ல அவர்களை வைத்து படமெடுத்தவர்களின் நிலையும் மோசமாகி விடும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். 

rajinikanth

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ,  “தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை, ஜெயலலிதா அரசியல் மறைவுக்கு பிறகு இருந்த அரசியல் வெற்றிடத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமி நிரப்பிவிட்டார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக பொன் ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து தவறானது. 

sellu Raju

உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை, அனைத்தும் யூகங்களே. போர் எந்த விதத்தில் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.