காடு இருந்தா எடுத்துகிடுவானுங்க.. காசு இருந்த புடுங்கிக்கிடுவானிங்க… ஆனா படிப்ப மட்டும் எடுக்கவே முடியாது! அசத்தும் அசுரன் டைலாக்

 

காடு இருந்தா எடுத்துகிடுவானுங்க.. காசு இருந்த புடுங்கிக்கிடுவானிங்க… ஆனா படிப்ப மட்டும் எடுக்கவே முடியாது! அசத்தும் அசுரன் டைலாக்

வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணி மீண்டும் அசுரன் படம் மூலம் இணைந்துள்ளது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணி மீண்டும் அசுரன் படம் மூலம் இணைந்துள்ளது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை  மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இப்படத்தின்  பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இந்தியா மட்டுமின்றி அசுரன் திரைப்படம் அமெரிக்காவிலுள்ள 110 திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. 

இந்நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு அசுரன் படத்தின் ட்ரைலரை கலைப்புலி எஸ். தாணு, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். வெளியான சில நிமிடங்களிலே ட்விட்டரில் டிரண்டாகிவிட்டது. ஏராளமானோர் கண்டுகளித்துள்ளனர்.

Asuran

சரி படத்தின் ட்ரைலரிலிருந்து தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் என்னானு பாக்கலாம்.. “காடு இருந்தா எடுத்துக்கிடுவானுங்க, ரூவா இருந்தா புடிங்கிக்கிடுவானுங்க ஆனா படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது. நமக்கு தேவையானதா நம்ம தான் அடிச்சு வாங்கணும்” போன்ற உணர்ச்சி பூர்வமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. படத்தி ட்ரைலரே இன்றைய சமூக சூழலுக்கு ஏற்றாற்போல உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனுஷின் புது தோற்றம், சண்டைக்காட்சிகள், உணர்ச்சிபூர்வமான வசனங்கள் என முற்றிலும் வேறுபட்டிருக்கும் இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என தனுஷ் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் அனைவரையும் அசரவைத்துள்ளது.