காடுவெட்டி குருவின் மகளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சொந்த கிராம மக்கள்: திருமணக் கோலத்தில் காவல் நிலையத்தில் தஞ்சம்!

 

காடுவெட்டி குருவின் மகளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சொந்த கிராம மக்கள்: திருமணக் கோலத்தில் காவல் நிலையத்தில் தஞ்சம்!

பாமக முன்னாள் எம்.எல்.ஏ காடுவெட்டி குருவின் மகள், தன் கணவருடன் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தங்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு கோரியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம்: பாமக முன்னாள் எம்.எல்.ஏ காடுவெட்டி குருவின் மகள், தன் கணவருடன் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தங்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு கோரியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியர் சங்கத் தலைவராகவும், பாமக முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும் இருந்த காடுவெட்டி குரு கடந்த மேமாதம் காலமானார். அவர் உயிரிழந்த பின், அவரது மனைவியை குடும்பத்தினர் சித்ரவதை செய்வதாக அவரது மகன் கனலரசன் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை மாறியது.

இந்த நிலையில், இன்று அவர் மகள் விருத்தாம்பிகை, தனது அத்தை மீனாட்சியின் மகன் மனோஜ்குமாரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் கும்பகோணத்தில் உள்ள மணமகன் வீட்டில் எளிமையாக நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் பங்கேற்ற நிலையில் குருவின் மனைவி லதா பங்கேற்கவில்லை.

அதன் பின், அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் உள்ள குருவின் சமாதிக்குச் சென்று வணங்கிய மணமக்களுக்கு காடுவெட்டி கிராம மக்கள் எதிர்ப்புகள் தெரிவித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

அதன்பின், ஊர்மக்கள் யாரும் அவர்களுடன் பேசக்கூடாது என கூறி ஒதுக்கி வைத்துள்ளனர். இதனையடுத்து, மணமக்கள் மனோஜ்குமார், விருத்தாம்பிகை, மணமகனின் தாய் மீனாட்சி ஆகிய மூவரும் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்குச் சென்று தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கக் கோரி மனு அளித்தனர். இந்த விவகாரம் பாமகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.