காடுவெட்டி குருவின் மகன் பா.ஜ.க-வில்! அதிர்ச்சியில் பா.ம.க

 

காடுவெட்டி குருவின் மகன் பா.ஜ.க-வில்! அதிர்ச்சியில் பா.ம.க

வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ஜெ.குரு உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவர் உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நேரம் குருவுக்கு டாக்டர் ராமதாஸ் எந்த உதவியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கடைசி கட்டத்தில் கட்சிக்குள், சமுதாயத்துக்குள் அதிருப்தி உருவாவதை உணர்ந்து உதவி செய்ய ஓடோடி வந்தார் ராமதாஸ்

காடுவெட்டி ஜெ.குருவின் மகன் கனலரசன் பா.ஜ.க-வில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பா.ம.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

anbumani-ramadoss

வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ஜெ.குரு உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவர் உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நேரம் குருவுக்கு டாக்டர் ராமதாஸ் எந்த உதவியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கடைசி கட்டத்தில் கட்சிக்குள், சமுதாயத்துக்குள் அதிருப்தி உருவாவதை உணர்ந்து உதவி செய்ய ஓடோடி வந்தார் ராமதாஸ். ஆனால், அதற்குள்ளாக ஜெ.குரு உயிர் பிரியும் நிலை வந்துவிட்டது.
அதன் பிறகு ஜெ.குருவை பற்றி ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பெரிய அளவில் பேசவில்லை. குருவின் குடும்பத்தினர் ராமதாசுக்கு எதிராக குரல் கொடுத்த நிலையில் மீண்டும் குரு மீதான பாசத்தை ராமதாஸ் வெளிப்படுத்தினார். பா.ம.க தொண்டர்கள் இதை ஏற்றுக்கொண்டாலும் ஜெ.குருவின் குடும்பத்தினர் மட்டும் ராமதாசை ஏற்கவில்லை. ராமதாசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை குரு குடும்பத்தினர் வெளியிட்டு வந்தனர்.

kaduvetti-guru-son

இந்த நிலையில் ஜெ.குருவின் மகன் கனலரசன் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கனலரசன் சால்வை அணிவிக்கும் அந்த படத்தைக் காட்டி அவர் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டார் அல்லது விரைவில் இணையப்போகிறார் என்று தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
பா.ஜ.க-வுடன் பா.ம.க கூட்டணி அமைத்துள்ளது. தன்னுடைய மகன் அன்புமணிக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தர ராமதாஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் பா.ம.க-வைச் சேர்ந்த முக்கிய தலைவரின் மகனை பா.ஜ.க-வில் சேர்ப்பது இரு கட்சியினர் இடையே விரிசலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.