காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு ஒரு டூப்ளிகேட் கோவிலா…!?

 

காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு ஒரு டூப்ளிகேட் கோவிலா…!?

காஞ்சிபுரத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. 1300 ஆண்டுகளுக்கு முன் ராஜசிம்மன் என்கிற பல்லவ ராஜ சிற்பியால் கட்டப்பட்ட இந்தக் கோவில் முழுவதும் கல்லால் ஆனது.

காஞ்சிபுரத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. 1300 ஆண்டுகளுக்கு முன் ராஜசிம்மன் என்கிற பல்லவ ராஜ சிற்பியால் கட்டப்பட்ட இந்தக் கோவில் முழுவதும் கல்லால் ஆனது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்படும் வரை இதுதான் தமிழகத்தில் பெரியகோவில்.இதன் வடிவம் ராஜராஜ சோழனின் சிந்தையில் ஏற்படுத்திய பாதிப்புதான்  தஞ்சை பெரிய கோவிலின் வடிவத்தில் தெரியும்.காஞ்சி கைலாசநாதர் கோவிலின் பெரிதாக்கப்பட்ட விசுவரூப வடிவம்தான் தஞ்சை பெரியகோவில்.

காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டிய ராஜசிம்ம பல்லன்தான் மகாபலிபுரத்தில் இருக்கும் கடைக்கரை கோவிலையும் உருவாக்கினான். அது அங்கே இயற்கையாகவே அமைந்திருந்த பாறையைச் செதுக்கி உருவாக்கப்பட்ட கோவில். கட்டுமான கோவிலல்ல.ஆனால் அதுவும் கைலாச நாதர் கோவிலின் அதே சிற்ப  அமைப்பைக் கொண்டதுதான்.

Kailasanathar Temple

ஆனால் உருவத்தில் சிறியது.மகாபலிபுரம் கடற்கரை கோவிலின் பெருவடிவம்தான்  காஞ்சி கைலாசநாதர் கோவில்.காஞ்சி கைலாசநாதர் கோவிலின் விசுவரூப வடிவம்தான் தஞ்சை பெரிய கோவில்.அதுவும் ராஜசிம்மன் காலத்துக்கு 300 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த ராஜராஜ சோழனை மட்டுமல்ல,சமகாலத்தவனான இன்னொரு அரசனை,அதுவும் எதிரியின் மனதிலும் தன் கலைத்திறனால் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறான் ராஜசிம்மன்.

அந்த எதிரியின் பெயர் இரண்டாம் விக்கிரமாதித்தயன். ராஷ்டரகூட மன்னனான விக்கிரமாதித்தன் காஞ்சியின் மீது  கி.பி 740-ல் படையெடுத்து வந்தபோது பல்லவர்கள் தலைநகரான காஞ்சியை விட்டு வெளியேறி விட்டார்கள்.காஞ்சிக்குள் நுழைந்த விக்கிரமாதித்தனையும் அவன் மனைவி லோகமாதேவியையும் கைலாசநாதர் கோவிலின் அழகும் கம்பீரமும் கவர்ந்து விட்டது. நாடு திரும்பும் போது காஞ்சியில் இருந்து சிற்பிகளையும் தன்னோடு அழைத்துப்போனார்கள்.

Kailasanathar Temple

அவர்களை கொண்டு கர்நாடகத்தில்,அப்பொழுது இராஷ்டிரர்கூட அரசின் ஆளுகையின் கீழ் இருந்த பட்டடக்கல் என்கிற இடத்தில் காஞ்சியிலிருந்து வந்த சிற்பிகளின் கைவண்ணத்தில் ஒரு கோவிலைக்  கட்டினான் இரண்டாம் விக்கிரமாதித்தன்.

அவனது மனைவி லோகமாதேவியின் இஷ்ட தெய்வமான விருபாக்‌ஷரை அங்கே எழுந்தருளச் செய்தான்.அந்த கோவில் காஞ்சிபுரம் கைலாச நாதர் கோவிலுக்கும், அதைக்கட்டிய ராஜசிம்மனுக்கும் அவனுடைய எதிரி உருவாக்கிய நினைவு சின்னமாக இப்போதும் கம்பீரமாக நிற்கிறது. அதுவும் எப்படிப் பட்ட எதிரி,எந்த வகையிலும் ராஜசிம்மனுக்கு குறையாத கலைக் காதலன். காஞ்சியைக்  கைப்பற்றி கைலாசநாதர் கோவிலை பார்த்ததும்,’இது நமது மன்னின் பொக்கிஷம்,இதை பாதுகாப்பது நமது கடமை’ என்று கல்லில் எழுதிவைத்த எதிரி. எதிரிகளைக்கூட கலாரசிகர்களாக அடைந்த ராஜசிம்மபல்லவன் உண்மையில் பெரிய அதிர்ஷக்காரன்தான்!

இதையும் படிங்க: களைகட்டிய கூத்தாண்டவர் திருவிழா: தாலி அறுத்து ஒப்பாரி வைத்த திருநங்கைகள்