காஞ்சியை தொடர்ந்து திருச்சியிலும் அத்தி வரதர்!

 

காஞ்சியை தொடர்ந்து திருச்சியிலும் அத்தி வரதர்!

கைலாசநாதர் கோவிலில் நேற்று  முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

காஞ்சியை தொடர்ந்து திருச்சியிலும் அத்தி வரதர்!

திருச்சி: காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரை போல் திருச்சியிலும் அத்திவரதர்  தரிசனம் நடைபெற்று வருகிறது. 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது அத்தி வரதர் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டுவிட்டு சென்றாலும்  குழந்தைகள் , முதியவர்கள் என பலரும் கூட்ட நெரிசலில் அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நேற்று  முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். ஆண்டு தோறும் ஆடிமாதத்தில் நடைபெறும் ருத்ராபிஷேகத்தை தொடர்ந்து அத்தி வரதர் தோன்றி  பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.

காஞ்சி மாநகரம் வந்து வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரை வழிபட்டு 
 செல்லமுடியாத ஏராளமான பக்தர்கள் திருச்சி அத்தி வரதரை  வணங்கி செல்கின்றனர்.நாளை வரை திருச்சி அத்தி வரதர் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.