காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இத்தனை டாஸ்மாக் தான் திறக்கப்படும்- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இத்தனை டாஸ்மாக் தான்  திறக்கப்படும்- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுவதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த 8 ஆம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக்கை திறக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன் எதிரொலியாக இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக்குகள் புதிய கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் னால் சென்னை,திருவள்ளூர் ஆகிய  மாவட்டங்களில் திறக்கப்படாது என்றும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. 

ttn

அதாவது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 49 கடைகளில் 13 கடைகள் மட்டுமே திறக்கப்படும் என்றும் வாலாஜாபாத் பகுதிகளில் மட்டுமே கடைகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 86 கடைகளில் 11 கடைகளுக்கு மட்டுமே அனுமதி திறக்கப்படும் என்றும் மதுராந்தகம், உத்தரமேரூர் பகுதிகளில் உள்ளே கடைகள் மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் டாஸ்மாக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டுக்கு வந்து மது வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மது வாங்க வருபவர்கள் மாஸ்க், ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.