காஞ்சிபுரத்தில் மகாபெரியவர் ஆராதனை விழா!

 

காஞ்சிபுரத்தில் மகாபெரியவர் ஆராதனை விழா!

காஞ்சிபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மகா பெரியவா ஆராதனை மகோற்சவ விழா இன்று  வெகு விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் : 

மகா பெரியவா என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 25 ஆம் ஆண்டு ஆராதனை மகோற்சவம்

mahaperiyavaa

காஞ்சி மடம் சார்பில் சுவாமிகளின் நினைவு இடத்தில்  கடந்த 31 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மகா பெரியவா ஆராதனை வைபவம் நடைபெற்றது. 

மகா பெரியவர் அவர்கள் உணவு யாத்திரைகள், தங்குகிற முகாம்கள் என்று எல்லாவற்றிலும் ஆடம்பரத்தைத் தவிர்த்து, எளிமையை மட்டுமே கடைப்பிடித்து வாழ்ந்த காரணத்தால் தான் சமீப காலத்தில் வாழ்ந்தவர்களில் மகா பெரியவர்தான் எல்லோர் நினைவிலும் சட்டென்று நினைவிற்கு வருகிறார்.

maha periyavaa

சுவாமிகள் 1994 ஆம் ஆண்டு சித்தியடைந்தார் அவரின் ஆராதனை ஆண்டுதோறும் சிறப்பாக காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று  25 ஆம்  வருட மகா ஆராதனையை முன்னிட்டு காலை 7 மணிமுதலே ஶ்ரீருத்ரபாராயணம், பூஜை, ஹோமம் ஆகியன நடைபெற்றது.

mahaperiyavaa

காஞ்சிபுரத்தில் மட்டுமல்லாது உலகெங்கும் இருக்கிற மகா பெரியவரின் பக்தர்கள் இன்றைய தினம் வேத பாராயணம், சிறப்பு ஹோமங்கள்,அன்னதானம் என்று ஆராதனை வைபவத்தினை உள்ளார்ந்த பக்தியோடு விமர்சையாகக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

மகோற்சவ தினத்தையடுத்து காஞ்சிபுரத்தில் நண்பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் பூர்ணாஹூதியும் நினைவிடத்தில் அபிஷேகமும் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் ஆராதனை வைபவத்தில் கலந்துகொண்டு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளின் திருவருள் பெற்றனர்.