காச நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாதா? – ஆய்வில் புதிய தகவல்

 

காச நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாதா? – ஆய்வில் புதிய தகவல்

காச நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக,மிக குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்லி: காச நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக,மிக குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கோடிக்கணக்கான நபர்களுக்கு அவர்களது குழந்தை பருவத்தில் பி.சி.ஜி எனப்படும் தடுப்பூசி போடப்பட்டிருக்கும். இது காசநோய்க்கான தடுப்பூசி ஆகும். இதனால் இந்த ஊசி போடப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். இந்த நிலையில், உலகெங்கிலும் 80,000-க்கும் அதிகமானவர்களைக் கொன்ற கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பி.சி.ஜி தடுப்பூசி புதிய நம்பிக்கையாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசி போடப்பட்ட நபர்களின் இறப்பு விகிதம் என்பது மிகவும் குறைவாக இருப்பதாக ஒரு புதிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

india

புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைப் பெறுபவர்களில் சுவாச அறிகுறிகளைக் குறைக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதா என்று விஞ்ஞானிகள் பி.சி.ஜி தடுப்பூசி அல்லது பேசில் கால்மெட்-குய்ரின் சோதனை செய்கிறார்கள். காச நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக,மிக குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. பி.சி.ஜி தடுப்பூசியானது காசநோயை எதிர்த்துப் போராடுவதற்காக 1920-களில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் மிக அதிகமான காசநோய் பாதிப்பை கொண்ட இந்தியா 1948-இல் பி.சி.ஜி வெகுஜன நோய்த்தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தியது.