காசிக்கு யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

 

காசிக்கு யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

காசிக்கு யாத்திரை சென்ற கோவையைச் சேர்ந்த 4 பேர் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜான்சி:  காசிக்கு யாத்திரை சென்ற கோவையைச் சேர்ந்த 4 பேர் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி, அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில்  வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவையிலிருந்து 68 பேர் ஒரு குழுவாகக் காசி யாத்திரை சென்றுள்ளனர்.  உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவிலிருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர்கள் பயணம் செய்துள்ளனர். 

death

இதில் ஜான்சி அருகே வந்தபோது ரயிலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த பச்சைய்யா (வயது 80) பாலகிருஷ்ண ராமசாமி (வயது 69) தனலட்சுமி (வயது 74)  சுப்பராய்யா (வயது 71). தெய்வானை (வயது 71) ஆகியோர் திடீர் உடல்நலக்குறைவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் ஜான்சியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இதில் நால்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கடும் வெப்பத்தால் இவர்கள்  மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

daeth

மேலும் இவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.