காங்.,பேரணி; காயமடைந்தவர்களுக்கு உதவிய ராகுல், பிரியங்கா-வைரல் வீடியோ!

 

காங்.,பேரணி; காயமடைந்தவர்களுக்கு உதவிய ராகுல், பிரியங்கா-வைரல் வீடியோ!

தனது வேட்புமனுவை வயநாடு மாவட்ட ஆட்சியர் அஜய்குமாரிடம் ராகுல் இன்று தாக்கல் செய்தார். அவருடன் பிரியங்கா காந்தி மற்றும் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் உம்மண் சாண்டி ,ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

வயநாடு: காங்கிரஸ் கட்சி பேரணியின் போது, காயமடைந்தவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் உதவி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் போட்டியிடுருகிறார்.

rahul nomination

இதற்கான தனது வேட்புமனுவை வயநாடு மாவட்ட ஆட்சியர் அஜய்குமாரிடம் ராகுல் இன்று தாக்கல் செய்தார். அவருடன் பிரியங்கா காந்தி மற்றும் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் உம்மண் சாண்டி ,ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கேரள அரசியலில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி. இந்த இரு கட்சிகளும் தான் மாறிமாறி அரியணையை அலங்கரித்து வருகின்றன. மேலும், ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது பாஜக-வுக்கு எதிரான எங்களின் வெற்றி வாய்ப்பைக் குறைத்துவிடும் என்று இடதுசாரிகள் கூறி வருகின்றனர்.

ஆனால், மத்திய பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் தென் இந்தியாவின் கலாசாரத்தின்மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. எனவே தான் தென்னிந்தியாவில் நான் போட்டியிட முடிவு செய்தேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு எதிராக கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிப்பேன். ஆனால் அவர்களை விமர்சித்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

வேட்புமனுவை தாக்கலை தொடர்ந்து, திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று ராகுலும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வாக்கு சேகரித்தனர். இந்த பேரணியின் போது, அளவுக்கு அதிமான கூட்டத்தில் எதிர்பாராத விதமாக தடுப்பு ஒன்று திடீரென விழுந்ததில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். அதில், புகைப்பட கலைஞர் ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து, காயமடைந்தவரை மீட்க ஆம்புலன்ஸ் அங்கு வந்துள்ளது. அப்போது அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற ராகுலும், பிரியங்காவும் உதவி செய்தனர்.ஆம்புலன்ஸில் அவரை ஏற்றும் வரை கூடவே இருந்த ராகுலும், பிரியங்காவும் அவரை ஏற்றி விட்ட பின்னரே அங்கிருந்து சென்றனர். அதிலும், குறிப்பாக பிரியங்கா காந்தி காயமடைந்தவரின்  ஷூவை தன கைகளில் எடுத்துச் சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிங்க

தமிழ்படம் சிவா பாணியில் ஓ.பி.எஸ்.-சை கலாய்த்த மு.க.ஸ்டாலின்