காங்கிரஸ் வென்றால் பாகிஸ்தானிகள் கைதட்டுவார்கள்; மோடியின் பிரியாணி கதை சொன்ன பிரியங்கா

 

காங்கிரஸ் வென்றால் பாகிஸ்தானிகள் கைதட்டுவார்கள்; மோடியின் பிரியாணி கதை சொன்ன பிரியங்கா

சன் பீம் பள்ளியில் மாணவர்களோடு கலந்துரையாடினார் பிரியங்கா, அவரது தொண்டர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். அயோத்தியில் பிரசாரம் செய்ய வந்த பிரியங்கா காந்தி மாபெரும் கூட்டம் திரண்டிருந்தது. மீண்டும் வந்துவிட்டார் இந்திரா காந்தி என்ற வாசகத்தை தாங்கிய போஸ்டர்கள் ஊரெங்கும் ஒட்டப்பட்டிருந்தது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மோடி பாகிஸ்தான் சென்றது பற்றி விமர்சித்துள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரசார வேலைகளில் பிஸியாக இருக்கிறது. இந்நிலையில் மீரட்டில் பிரசாரம் செய்த பிரியங்கா காந்தி, 2015-ஆம் ஆண்டு மோடி பாகிஸ்தான் சென்றது பிரியாணிக்காக என விமர்சித்தார். அதேபோல் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வென்றால் பாகிஸ்தானிகள் கைதட்டுவார்கள், அதுதான் அவர்கள் மனநிலை என தெரிவித்தார்.

பிரதமர் மோடி குறித்த விமர்சனம் பற்றி பிரியங்கா-விடம் கேள்வி எழுப்பியதற்கு, 2015-ஆம் ஆண்டு மோடி பாகிஸ்தான் சென்றது அவரது சகா நவாஸ் ஷெரிப்பை சந்திக்க. அதைதான் அப்படி விமர்சித்ததாக பேட்டி அளித்துள்ளார்.

modi

சன் பீம் பள்ளியில் மாணவர்களோடு கலந்துரையாடினார் பிரியங்கா, அவரது தொண்டர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். அயோத்தியில் பிரசாரம் செய்ய வந்த பிரியங்கா காந்திக்கு மாபெரும் கூட்டம் திரண்டிருந்தது. மீண்டும் வந்துவிட்டார் இந்திரா காந்தி என்ற வாசகத்தை தாங்கிய போஸ்டர்கள் ஊரெங்கும் ஒட்டப்பட்டிருந்தது.

ind

காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் இதில் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா காந்திக்கு இந்திரா காந்தி புகைப்படத்தை பரிசளிக்க வந்த தொண்டர் ஒருவர் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தபோது காயமடைந்தார். பிரியங்கா காந்தி அவருக்கு தன் கைகளால் மருத்துவ முதல் உதவி செய்தார்.

பிரியா

அதன்பிறகு பேசிய பிரியங்கா, காங்கிரஸின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் ஏழைகளுக்கு 72,000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்தும் பேசினார்.

இதையும் வாசிங்க: தோல்வி பயத்தில் ஜோதிமணிக்கு கொலை மிரட்டல்; கத்தியை காட்டிய இளைஞர்களால் பரபரப்பு?