காங்கிரஸ் வரட்டும் பார்க்கலாம்; நீதிமன்றத்தை அதிரவைத்த நபர்?!

காங்கிரஸ் வரட்டும் பார்க்கலாம்; நீதிமன்றத்தை அதிரவைத்த நபர்?!

மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ஆனந்த் ஷர்மா என்பவருக்கும் தீப்மாலா என்கிற பெண்ணுக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் நிகழ்ந்தது.  இந்த ஜோடிக்கு  ஆர்யா என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மனைவிக்கு தர வேண்டிய வாழ்வாதாரத் தொகையை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தருவதாக நீதிமன்றத்தில் ஒரு நபர் கூறியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ஆனந்த் ஷர்மா என்பவருக்கும் தீப்மாலா என்கிற பெண்ணுக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் நிகழ்ந்தது.  இந்த ஜோடிக்கு  ஆர்யா என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

d

இந்நிலையில் தீப்மாலா,  கணவரையே நம்பி வாழ்ந்ததால் தன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது என்று மகளுக்கும் தனக்குமான வாழ்வாதாரத் தொகையினை தன் கணவர் வழங்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும் மாதாமாதம் 4,500 ரூபாய் தொகையை தீப்மாலாவுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதற்கு ஆனந்த் தன் சார்பில் தாக்கல் செய்த மனுவில், தான் வேலையின்றி இருப்பதாகவும் சினிமாவில் பணிபுரியும் தனக்கு போதிய வருமானம் இல்லாததாலும் நீதிமன்ற உத்தரவை உடனே செயல்படுத்த முடியாது என வருத்தம் தெரிவித்தார். மேலும் அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தன் மனைவியின் வங்கிக் கணக்கில் மாதம் 6000 ரூபாய் தன்னால் செலுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

cong

 காங்கிரஸ், நாட்டில் உள்ள ஏழைகளுக்கு வருடத்துக்கு 72 ஆயிரம் உதவித் தொகையாக அளிக்கவுள்ளதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததால் இத்தகைய காரணத்தை ஆனந்த் ஷர்மா கூறியிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் செய்ய முடியும் என அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்க: காதலனின் மனைவியை கொலை செய்த காதலி; மூன்று மாதத்திற்கு பிறகு கண்டுபிடித்த போலீசார்!