காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு…சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா சிதம்பரம்

 

காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு…சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்துள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்துள்ளனர்.சோனியா காந்தி,மன்மோகன் சிங்

கடந்த 2006 ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 350 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பிரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.இந்த வழக்கில் ப.சிதம்பரம் செப்டம்பர் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டுத் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில்  சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தார். அப்போது சிபஐ தரப்பு உண்மையை நிரூபிக்க சிறிது கால அவகாசம் கோரியிருந்தது. இதனை அடுத்து அவரின் காவலை  அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்திரவிட்டது.ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்

இந்நிலையில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தனர்.இந்த சந்திப்பில் ப.சிதம்பரத்தின் மகனும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யு மான கார்த்தி சிதம்பரமும் உடனிருந்தார். இந்த சந்திப்பு கடந்த 1 மணி நேரமாக நிகழ்ந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்து விவரங்களைத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.