காங்கிரஸ் தோல்வி: அதிர்ச்சியில் உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்!?

 

காங்கிரஸ் தோல்வி: அதிர்ச்சியில் உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்!?

காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 மத்தியப்பிரதேசம்: காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

bjp

பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 344 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 91 இடங்களிலும், மற்றவை 108 இடங்களிலும் முன்னிலை வைக்கிறது. இதனால் மீண்டும் மத்தியில் பாஜகவே ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இதன் காரணமாக இரண்டாவது முறையாக வரும் 26 ஆம்  தேதியன்று மோடி பிரதமராகப் பதவி ஏற்கிறார். இதனால் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

 

ratan singh

இது ஒருபுறமிருக்கக் காங்கிரஸ் கட்சியினரோ சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதன் உச்சக்கட்டமாகக் காங்கிரஸ் தோல்வியால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரத்தன் சிங் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.  மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் சீஹோர் மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவர் ரத்தன் சிங் வாக்கு எண்ணும் மையத்தில் முடிவுகளைத் தெரிந்துகொள்ளக் காத்துக்கொண்டிருந்தார். 

murder

ஆனால் நேரம் செல்ல செல்ல, பாஜக முன்னிலை வகிப்பதாகத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதை அறிந்த ரத்தன் சிங் நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால்  அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரத்தன் சிங்கின் இந்த திடீர் மரணத்திற்குக்  காங்கிரஸ் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.