காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி..

 

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி..

காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரைத் தேர்வு செய்யுங்கள் என்று ராகுல் காந்தி வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரைத் தேர்வு செய்யுங்கள் என்று ராகுல் காந்தி வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி செல்வாக்கு பெற்ற  தொகுதியான அமேதியில் பாஜக நிர்வாகி ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.

rahul

இதன் காரணமாகக் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில  தலைவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து ராகுல்காந்தியும் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால்  அவருடைய ராஜினாமா கடிதம் இன்னும் காரியக்கமிட்டியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும்  காங்கிரஸ் மூத்த தலைவர் பலரும் ராகுல்காந்தியின் ராஜினாமா செய்யக் கூடாது என்று வலியுறுத்தினர்.

rahul

இந்நிலையில், ‘தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை. ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டேன். காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரைத் தேர்வு செய்யுங்கள். புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான கூட்டத்தை உடனே கூட்டுங்கள்’ என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.