காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? கே.எஸ்.அழகிரியின் கேள்வியால் பரபரப்பு!

 

காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? கே.எஸ்.அழகிரியின் கேள்வியால் பரபரப்பு!

காங்கிரஸ் கட்சி தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். 

நாங்குநேரி: காங்கிரஸ் கட்சி தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். 

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் எம்பியாகி விட்டதால் அந்த தொகுதியும்,  விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி மரணமடைந்ததால்  அந்த தொகுதியும் காலியாக உள்ளது. இதனால் மீண்டும் நாங்குநேரியில்   காங்கிரஸ் வெற்றி பெற முனைப்புக் காட்டி வருகிறது. ஆனால்  திமுகவோ இருதொகுதிகளிலும் களம்காண திட்டமிட்டுள்ளது. 

alagiri

இந்நிலையில் நாங்குநேரியில் நடைபெறும் கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘தென் தமிழகம் என்பது காங்கிரஸின்  உயிர்நாடி.  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியில் பலம் இருந்தும் காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? கூட்டணியின்றி வெற்றிபெற முடியுமா என்பது பற்றி விவாதிக்கவே செயல்வீரர்கள்  கூட்டம் கூட்டப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் 50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாகவே இருப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

dmk

இடைத்தேர்தலில் போட்டியிடக் காங்கிரஸ் உறுதியாகவுள்ள நிலையில் கூட்டணியின்றி வெற்றிபெற முடியாத என்று கேட்டுள்ளது திமுக- காங்கிரஸ் கூட்டணியின் விரிசலையையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.