காங்கிரஸ் கூட்டத்தில் திமுக ஏன் பங்கேற்கவில்லை.. திமுக எம்.பி டி.ஆர்.பாலு விளக்கம் !

 

காங்கிரஸ் கூட்டத்தில் திமுக ஏன் பங்கேற்கவில்லை.. திமுக எம்.பி டி.ஆர்.பாலு விளக்கம் !

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அதே போல, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டும், திமுக சார்பில் பேரணி நடத்தியும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திமுக சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்தது மட்டுமின்றி, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படாததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதும், டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும் திமுக தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். 

ttn

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால், குடியுரிமை சட்டத்திருத்தத்தின் எதிர்ப்பில் இருந்து திமுக பின்வாங்குவதாகக் கூறப்பட்டது. இவ்வளவு நாள் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்த திமுக கலந்து கொள்ளாதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

 

ttn

திமுக ஏன் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு, திமுக எம்பி டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார். அதில்,”  கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை என்று கே.எஸ் அழகிரி கூறிய பின்னர், காங்கிரஸ் கூட்டத்தில் எப்படிப் பங்கேற்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சியில் பிரச்னை இருந்தால் அழகிரி, ஸ்டாலினிடம் நேரடியாகத் தெரிவித்திருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.