காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிடும் கருணாஸ் பட நாயகி!

 

காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிடும் கருணாஸ் பட நாயகி!

மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் நடிகை நவ்நீத் கவுர் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமராவதி: மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் நடிகை நவ்நீத் கவுர் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

actress

நடிகை நவ்நீத் கவுர் தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த இவர் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு சுயேச்சை எம்.எல்.ஏ ரவி ராணாவை நவ்நீத் திருமணம் செய்துகொண்டார்.

 

ttn

இவர்களின் திருமணத்திற்கு பிறகு ரவி ராணா  யுவா ஸ்வாபிமான் என்ற கட்சியை தொடங்கினார். இந்த காட்சியானது வருகிற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில்  நவ்நீத் கவுர்  அமராவதி தொகுதியில் போட்டியிடுகிறார். 

ttn

கடந்த மக்களவைத் தேர்தலில்  சிவசேனா வேட்பாளர் ஆனந்த் ராவ் அட்சுல்லிடம் நவ்நீத் கவுர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் வாசிக்க: டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா ? – வெளியான ஆய்வு முடிவுகள்