காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறாரா பிரியங்கா காந்தி? மூத்த தலைவர்கள் வரவேற்பு!

 

காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறாரா பிரியங்கா காந்தி? மூத்த தலைவர்கள் வரவேற்பு!

பிரியங்கா காந்திக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களே வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பைப் பிரியங்கா ஏற்பாரா? என்பது விரைவில் தெரியவரும். 

காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறாரா பிரியங்கா காந்தி? மூத்த தலைவர்கள் வரவேற்பு!

புதுடெல்லி:  காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பைப் பிரியங்கா காந்தி ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

priyanka

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததையடுத்து ராகுல்காந்தி  தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால்  அவருடைய ராஜினாமா கடிதம்  காரியக்கமிட்டியால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தது. மேலும்  காங்கிரஸ் மூத்த தலைவர் பலரும் ராகுல்காந்தியின் ராஜினாமா செய்யக் கூடாது என்று வலியுறுத்தினர்.ஆனால்  தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை. ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டேன். காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரைத் தேர்வு செய்யுங்கள். புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான கூட்டத்தை உடனே கூட்டுங்கள்’ என்று ராகுல் காந்தி வெளிப்படையாக அறிவித்தார். ராகுலின் இந்த அறிவிப்பால் புதிய தலைவரை  நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் மக்களவை எம்பி சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக நம்பிக்கை வாய்ந்த பிரியங்கா காந்தியே வரவேண்டும் என்று தெரிவித்தார். இதை அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதலமைச்சருமான அமரிந்தர் சிங், தமிழக  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோர் வழிமொழிந்துள்ளனர். 

கடந்த மக்களவை தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட  பிரியங்கா காந்தி, மக்களின் கவனத்தை ஈர்த்தார். மக்களுடன் எளிமையாகப் பழகுவது, எதிர்க்கட்சி தொண்டர்களுக்கும் காரை நிறுத்திக் கைகொடுத்து வாழ்த்து கூறுவது என அதிரடி காட்டினார் பிரியங்கா. 

தற்போது காங்கிரஸ் கட்சியுள்ள நிலையில் பிரியங்கா காந்திக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களே வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பைப் பிரியங்கா ஏற்பாரா? என்பது விரைவில் தெரியவரும்.