காங்கிரஸ் கட்சிக்கு கல்தா… 3வது அணிக்கு உத்திரவாதம் கொடுத்த மு.க.ஸ்டாலின்..!

 

காங்கிரஸ் கட்சிக்கு கல்தா… 3வது அணிக்கு உத்திரவாதம் கொடுத்த மு.க.ஸ்டாலின்..!

அடுத்து 5 ஆண்டுகள் இந்தியாவை ஆள்வது ஒன்று பாஜகவாக இருக்கும் இல்லையென்றால் பெடரல் அணியாக இருக்கும். ராகுல் காந்தி பிரதமராக முடியாது என்கிறார்கள்.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில் இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது 7 ஆம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப்போவது யார் என்பது வாக்குகள் எண்ணப்படும்  23 ஆம் தேதி  மாலை தெரியவரும். இந்நிலையில் காங்கிரஸ், பாஜக அல்லாத 3 -வது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரா சேகர ராவ் ஈடுபட்டு வருகிறார்.ஸ்டாலின்

இதற்காக அவர் திமுக தலைவர் ஸ்டாலினை மட்டுமல்ல, பிற மாநில முதல்வர்களையும் சந்தித்து வருகிறார். மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர், ’மத்தியில் 3 ஆவது அணியான பெடரல் அணிக்கு ஆதரவு தரும்படி ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்போது காங்கிரஸ் கட்சி 180 இடங்களுக்கும் குறைவான இடங்களில் வெற்றிபெற்றால் தான் பெடரல் அணிக்கு ஆதரவு தருவதாக ஸ்டாலின் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் 150 இடங்களை பெறுவதே கடினம் அதனால் ஸ்டாலின் நிச்சயம் பெடரல் அணிக்கு தாவிவிடுவார் என்கிறார்கள்.ஸ்டாலின்

பாஜகவும் 272 இடங்களுக்கு குறைவான இடங்களை பிடித்தால் பெடரல் அணி ஆட்சியமைக்க வாய்ப்பு உருவாகும். அப்படி பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியிடம் பெடரல் அணிக்கு ஆதரவு கேட்டு பெடரல் அணி சார்பில் ஒருவர் பிரதமர் என்று சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.ஸ்டாலின்

அடுத்து 5 ஆண்டுகள் இந்தியாவை ஆள்வது ஒன்று பாஜகவாக இருக்கும் இல்லையென்றால் பெடரல் அணியாக இருக்கும். ராகுல் காந்தி பிரதமராக முடியாது என்கிறார்கள். பெடரல் அரசு அமைந்தால் அது கத்திமேல் நடப்பதுபோல எந்த நேரமும் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.  ஆக மொத்தத்தில் மு.க.ஸ்டாலின் 3 வது அணிக்கு தாவுவது உறுதி என்கிறார்கள்.