காங்கிரஸ் எம்பிக்கள் பாஜகவிடம் பணம் வாங்கினார்களா? – குழப்பத்தை ஏற்படுத்திய வைகோ

காங்கிரஸ் எம்பிக்கள் பாஜகவிடம் பணம் வாங்கினார்களா? – குழப்பத்தை ஏற்படுத்திய வைகோ

திமுக எம்எல்ஏக்கள் ஓட்டுப்போட்டு என்னை மாநிலங்களவைக்கு அனுப்பினார்கள், காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் தேர்வானதில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏக்கள் ஓட்டுப்போட்டு என்னை மாநிலங்களவைக்கு அனுப்பினார்கள், காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் தேர்வானதில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகார ரத்து மசோதா மீதான விவாதத்தில் பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி மற்றும் ஜவஹர்லால் நேருவின் தவறான கொள்கையே ஜம்மு காஷ்மீரின் நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.காங்கிரசை அவதூறாக பேசிய வைகோவை பச்சோந்தி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இதனால் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த சூழலில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “கொள்கையை விட்டுக் கொடுக்காதவன் வைகோ என்பதை உலகம் அறியும். காங்கிரசின் தயவால் தான், நான் மாநிலங்களைவை எம்.பி ஆனேன் என கே.எஸ்.அழகிரி சொல்வது தவறு, என்மீதான வன்மத்தால் கே.எஸ்.அழகிரி இதுபோன்று பேசுகிறார். காஷ்மீர் மசோதாவின்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் 12 பேர் வாக்களிக்கவில்லை. அவர்கள் எல்லாம் மத்திய அரசிடம் பணம் வாங்கிவிட்டார்களா? ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்களால் தான் நான் எம்.பி. ஆனேன். ஏற்கனவே 3 முறை மாநிலங்களவை எம்.பி.யானதும் கருணாநிதி தயவால்தான்” என்று கூறினார்.