காங்கிரஸ் உடனான கூட்டணியை வெறுக்கும் திமுக!

 

காங்கிரஸ் உடனான கூட்டணியை வெறுக்கும் திமுக!

திமுக – காங்கிரஸ் கூட்டணி பிரிய வாய்ப்பே இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கூறியுள்ளார். கூட்டணி தொடருமா என்பதற்கு காலம் பதில் சொல்லும் என திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 

திமுக – காங்கிரஸ் கூட்டணி பிரிய வாய்ப்பே இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கூறியுள்ளார். கூட்டணி தொடருமா என்பதற்கு காலம் பதில் சொல்லும் என திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தலில்  கூட்டணி தர்மத்திற்கு எதிராக திமுக செயல்படுவதாக அக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியது. காங்கிரசுக்கு ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி கூட வழங்கப்படவில்லை என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. 

stalin-with-balu

டெல்லியில் காங்கிரஸ் நடத்திய எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது அக்கூட்டணியின் பிரச்னையை தேசிய அளவில் வெளிச்சம்போட்டுக் காட்டியது.  இதனிடையே திமுகவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்த கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லி சந்தித்துப் பேசினார். திமுக – காங்கிரஸ் கூட்டணி நிலவரம் குறித்து சோனியாவிடம் விளக்கியதாக் கூறிய அழகிரி, தங்கள் கூட்டணி பிரிய வாய்ப்பே இல்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கூட்டணி உறுதியாக உள்ளது என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலே, கூட்டணி தொடருமா என்பதற்கு காலம் பதில் சொல்லும் என்றார் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு. கூட்டணி தர்மத்தை மீறியதாக திமுக மீது குற்றம்சாட்டியதாலே காங்கிரஸ் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று விளக்கம் அளித்தார். கூட்டணி பிரிய வாய்ப்பு இல்லை என காங்கிரசும், காலம் பதில் சொல்லும் என திமுகவும் கூறியிருப்பது அக்கூட்டணியில் அதிருப்தி தொடர்வதையே காட்டுகிறது.