காங்கிரஸ் இளவரசருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன காவலாளி! சவுக்கிதாருக்கு நன்றி கூறிய இளவரசர்

 

காங்கிரஸ் இளவரசருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன காவலாளி! சவுக்கிதாருக்கு நன்றி கூறிய இளவரசர்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று 40 வயதில் அடியெடுத்து வைக்கிறார். ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு ராகுல் அவருக்கு நன்றி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று 40 வயதில் அடியெடுத்து வைக்கிறார். ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு ராகுல் அவருக்கு நன்றி தெரிவித்தார்.

rahul gandhi

இந்தியாவை சுமார் 70 ஆண்டுகள் ஆண்ட கட்சி காங்கிரஸ். பாரம்பரியமிக்க அந்த கட்சியின் தலைவராக பெரும்பாலும் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்களே இருந்து வருகின்றனர். சோனியா காந்தி தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு அந்த பதவி ராகுல் காந்திக்கு வந்தது. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பலத்த அடி வாங்கியது. தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் அந்த கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இன்னும் அவர்தான் அந்த கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். தேர்தல் அதிர்ச்சியிலிருந்து அந்த கட்சியினர் இன்னும் மீளவில்லை.

rahul gandhi

காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் நிலவி வந்த இறுக்கமான சூழ்நிலை இன்று சற்றே மாறியது. இதற்கு காரணம் காங்கிரஸ் இளவரசர் என்று அன்பாக அழைக்கப்படும் ராகுல் காந்தியின் பிறந்த தினம் இன்று. ராகுலின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். அவர்களுடன் தனது 40வது பிறந்தநாளை ராகுல் காந்தி கொண்டாடினார். தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி இனிப்பு வழங்கினார்.

இதற்கிடையே, ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருக்க வேண்டும் என்று வாழ்த்தி டிவிட் செய்து இருந்தார். பதிலுக்கு ராகுல் காந்தி தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி நரேந்திரமோடிஜி என்று டிவிட் செய்தார்.

நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பிரதமர் மோடி தன்னை “சவுக்கிதார்” (காவலாளி) என கூறினார். இதனை வைத்து பா.ஜ.க.வினரும் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதனை கடுமையாக விமர்சனம் செய்தனர். ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் “காவலாளிதான் திருடன்” என்று எதிர் பிரச்சாரம் செய்தனர்.