“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி” – ராகுல் காந்தி உறுதி

 

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி” – ராகுல் காந்தி உறுதி

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அனைத்து மாநில விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

ஜெய்ப்பூர்: நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அனைத்து மாநில விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் இந்திய பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாஜகவும், தேசிய அளவில் மெகா கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸும் தீவிரமாக வியூகங்களை வகுத்து வருகிறது. 

அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. பதவி ஏற்றவுடன் முதல்வேளையாக விவசாயக் கடன் ரத்து என்கிற தேர்தல் வாக்குறுதியை ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ராகுல் காந்தி, “பாராளுமன்ற  தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மத்தியில்  ஆட்சி அமைத்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம்” என பேசியுள்ளார்.

மேலும், வெறும் கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் நெருக்கடிக்குத் தீர்வாகிவிட முடியாது என்றும் நாட்டில் ஒரு புதிய பசுமைப் புரட்சியும் ஏற்பட்டாக வேண்டும் என்றும் தன் பேச்சில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.